செவ்வாய், 21 ஜூலை, 2020

 

தற்போதைய இந்தியச் சூழலில் திரைப்படங்களில் பேச முடியாத ஆனால் பேசியாகவேண்டிய விசயங்களை துணிச்சலாக இணையத் தொடர்கள் பேசத் தொடங்கியிருக்கின்றன. அந்த வகையிலான இரண்டு தொடர்கள்.
பிரயாக் அக்பரின் நாவலைத் தழுவி தீபா மேத்தா இயக்கியிருக்கும் தொடர் லேலா. இன்றைய இந்திய காவி அரசியல் தொடர்ந்தால் எதிர்கால இந்தியா என்னவாக இருக்கப்போகிறது என்று புரிந்துகொள்ளத்தக்க யதார்த்தமான கற்பனை(நெட் ஃபிளிக்ஸ்)
வாக்கு வங்கி அரசியல் - பாகிஸ்தான் பூச்சாண்டி - இந்திய காவல்/ உளவு அமைப்புகளின் சதிகள் -  தொலைக்காட்சி ஊடகங்களின் இயங்கு முறைகள் - இவர்களின் ஊடாக சிக்கிக் கொள்ளும் எளிமையான குற்றவாளிகள், பலிகடாவாகும் இளைஞர்கள் மற்றும் அப்பாவி காவலதிகாரிகள் - அருமையான திரைக்கதை உரையாடல்களுடன் பட்டால் லாக்.( அமேசான் ஃரைம் - தமிழ் உப உரையாடல்களுடன்)

கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தபோது அது மனதில் உருவாக்கிய படிமங்களைக் காட்சிப்படுத்த வேண்டும்போல தோன்றியது. அவ்வப்போது இணையத் தளங்களில் கொட்டிக்கிடக்கும் புகைப்படங்கள், ஓவியங்களை மேயும்தோறும் அவற்றின் அழகும் படைப்பாற்றலும் மனதை அலைக்கழிக்கும். கவிதைகளையும் காட்சிப்படிமங்களையும் ஒரு இசைத்துணுக்கிணூடாக இணைத்துப் பார்த்திருக்கிறேன். தொடர்ந்து சில கவிதைகளுக்கு காட்சி வடிவம் கொடுக்கும் யோசனை இருக்கிறது. நண்பர்களுடைய வினைகள், எதிர்வினைகள், செய்வினைகள் வரவேற்கப்படுகின்றன.



என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.